
யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கு சாரையடி வீரபத்திர கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூரணம் கந்தசாமி அவர்கள் 17-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
துவாபரன்(கனடா), மோகனதாஸ்(ஜேர்மனி), புவிதரன்(ஜேர்மனி), நவீந்திரன்(இலங்கை), குகநேசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜனனி(கனடா), பவானி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், விநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,
சிவகுருநாதன் அவர்களின் பாசமிகு சிறிய தாயாரும்,
தர்மிகா, தாருகா, தனுர்சாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனை விழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.