திருமதி பூமணி சிற்றம்பலம் அவர்கட்க்கு எம் இதயம் கனிந்த அஞ்சலி ஜெயராஜன், ஜெயப்பிரகாஷ், காயத்திரி, மைத்திரி மற்றும் மற்றும் குடும்பத்தாருக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் எம் இதயம் கனிந்த துக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். நான் இளம் பராயத்தில் இருந்த காலம் தொட்டு, உங்களின் தாயார் என்னையும் உங்களில் ஒரு பிள்ளையாக அன்பாகவும் ஆதரவாகவும் ஓர் குடும்ப உறுப்பினர் போலவும் அணைத்து நடாத்தி வந்துள்ளார். மிகவும் நேர்மியாகவும், கண்ணியமாகவும், தன் புன்சிரிப்பு மூலமாக மற்றவர்களைக் கனம் பண்ணி, குடும்பப் பொறுப்புகளை ஏற்று, தன் பிள்ளைகளுக்காகவும், கணவனுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்த ஓர் உத்தமர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். அன்னார் எங்கள் எல்லோர் மனம்களிலும் என்றும் நிறைந்த இருப்பார்! ஓம் சாந்தி