1ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்மகிழ 10 MAY 1945
கண்நெகிழ 07 JUL 2021
அமரர் பூமணி தங்கராசா
வயது 76
அமரர் பூமணி தங்கராசா 1945 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு கோவில் போரதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூமணி தங்கராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம்
சோதனைகள் வரும்போதெல்லாம்
சோர்ந்துவிடாதீர்கள் என்று கூறி
சொன்ன வார்த்தைகள் எங்கள் முன்னே
சொர்க்கத்தை போல் காதினில்
 ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!

பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அம்மா!
 எங்களுக்கு வாழ வழிகாட்டிய
 எங்கள் அம்மா எம் தேவைகள்
அனைத்தையும் நிறைவேற்றி விட்டு
 எம்மை விட்டு போக உங்களுக்கு
 எப்படி மனசு வந்தது அம்மா?
எமக்காக ஒரு முறை வாருங்கள் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 10 Jul, 2021