
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி கந்தையா அவர்கள் 21-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
இராஜேஸ்வரி, புனிதவதி, சுகுந்தலாதேவி, தவேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, சின்னராசா, பாலசிங்கம், சின்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கணேசமூர்த்தி, தங்கவடிவேல், நாகேந்திரம், நகுலேந்திரம் ஆகியோரின் அருமை மாமியும்,
வைதேகி - கோகுலரஞ்சன், இராகவன், சிந்துஜா, கெளதமி, அனோஜன் - கஜாலினி, விஸ்வினி - கணேசதாசன், ஜதுலா, தாரணி - யசிந்தன், திவானிசா, சாண், ஜனுசன் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
கேசிகா, அக்சியன், ஆதவ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.