
யாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூமகள் தர்மநாயகம் அவர்கள் 13-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் சின்னத்தங்கச்சி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி(ஓய்வுநிலை உத்தியோகத்தர்- விவசாயத் திணைக்களம்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கட்டுவன் மயிலிட்டி தெற்கைச் சேர்ந்த தர்மநாயகம்(ஓய்வுநிலை உத்தியோகத்தர்- லங்கா சீமெந்து கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
பேபி, காலஞ்சென்ற சண்முகநாதன், பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துஷ்யந்தி, துசாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதேசன்(லண்டன்), சிந்துஜன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆதீரன், மீனாட்சி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2019 திங்கட்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.