13ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த பூலோகசுந்தரி யோகராசா அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிருக்குள் உயிரான
ஒளியின் திருமுகமே
வாசமலராய் வந்து மணம் பரப்பிவிட்டு
வீசும் காற்றோடு கலந்திட்ட
மாயமென்ன!
உலகையே எங்களுக்கு
தந்தாலும் உங்களை போல்
இணை ஆகுமா- அம்மா
உங்கள் கருவிலே சுமந்து
எங்களுக்கு உயிர்கொடுத்தாய்...
இன்று நீங்கள் இன்றி எங்கள்
உயிர் விலகி நிற்கின்றது அம்மா...
ஆண்டுகள் 13
கடந்தாலும் அமைதியின்றி
வாழ்கிறேன் உங்கள்
நினைவுடனே அம்மா!
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்