யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தங்கவேலு அவர்கள் 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சீதாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தேவசேனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சந்தானலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
கலாதேவி, கலாநிதி, பேரானந்தசிவம், ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோமசுந்தரம், சிவபாலன், பத்மலோஜினி, சிறி, சந்திரா, காலஞ்சென்ற கமலநாதன், நகுலராஜன், சகுந்தலா, தேவராணி, கமலேஸ்வரி, துளசிதாசன், தர்மசீலன், காலஞ்சென்ற பாலசுதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.