Clicky

20ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 JUL 1928
இறப்பு 26 MAR 2001
அமரர் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம்
இளைப்பாறிய வரி மதிப்பீட்டாளர்- உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
வயது 72
அமரர் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் 1928 - 2001 தாவடி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும்,  குரும்பசிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள அப்பா!!

இருபது ஆண்டுகள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்
கரைந்து கரைந்து
மணங் கமழும் சந்தனமாய்
உருகி உருகி ஒளி வழங்கும்
மெழுகு வர்த்தியாய்

இன்பமாய் நாம் வாழ
இனியவை பல செய்தீர்
இனியவரே உங்கள் திருவதனம்
எப்படி நாம் மறப்போம்
மறக்கவும் முயல்வோமோ
மறுக்கவும் முயல்வோமோ?
நீங்கள் இல்லாதக் குறைதீர்க்க
பாரினிலே யாருண்டு?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.... 

என்றும் உங்கள் நினைவில்
மனைவி ராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம்,
மகன் சிவாஜி(சுவிஸ்), மகள் சுகந்தினி கிருபாகரன்
(நோர்வே)


தகவல்: கிருபாகரன் - மருமகன்