1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை சக்திவேல் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 19-12-2025
எம் நெஞ்சில் நீங்காத எங்கள் அன்புத் தெய்வமே!
ஓராண்டு காலம் உருண்டு மறைந்து விட்டாலும்
தாங்கள் பிரிந்த நாள் முதல் எங்கள்
கண்ணீரும், ஏக்கமும் என்றும் குறையவில்லை.
ஒவ்வொரு உறவிலும் ஒளிவீசும் பாசமலர் நீர்
உழைப்பால் உயர்ந்த குடும்பத்தலைவன் நீர்
இறை பாதம் பணிந்த பக்திக் கடல் நீர்
குடும்ப நலன் ஒன்றே நித்தியக் கனவாய் கொண்டீர்
வானம் உள்ளவரை உங்கள் புகழ் தொடரும்
சூரியன் உள்ளவரை எங்கள் மனம் கலங்கும்.
இந்த ஒரு வருடம், ஒரு யுகமாய் கடந்து விட்டது.
உங்கள் ஆசிகள் எப்போதும் எம்மைக் காக்கும்.
உங்கள் ஆத்ம சாந்திக்காக அனுதினமும் பிரார்த்திப்போம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்