யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனியா குருமன்காடு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை இராஜகோபாலன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே, அன்பானவரே,
அமைதியான சுபாவம் கொண்டவரே,
இனிமையான பேச்சால் எம்
இதயம் கவர்ந்தவரே
எவரையும் துன்பபபடுத்தாத
பண்பட்ட குணம் கொண்டவரே
அருகில் இரூந்து எம்மை அனைத்திட
ஆசையாய் இருக்கின்றதப்பா
நிறைவேற்ற முடியாது தான் ஆனாலும்
நினைவுகள் நம்மை வாட்டுதப்பா
கல்லில் செதுக்கப்பட்ட சிலை
காலத்தால் அழியாதப்பா அதுபோல்
நெஞ்சில் பதிந்த உங்களின் உருவம்,
நீண்ட நாள் ஆனாலும் மறையாதப்பா
உங்களின் நினைவுதனைச் சுமந்து
நேர் வழியில் சென்று
காலங்களைக் கடந்து செல்வோம் நாங்கள் அப்பா
உங்கள் நினைவில் வாழும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள்,
மைத்துனர்கள், மைத்துனிமார்கள், மருமக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்...