திதி:28/12/2024
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுதுரை பேரின்பநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டு ஆண்டு சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் பிரிந்து இரண்டு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!
ஆண்டுகள் இரண்டு உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்பு முகம் எம்
நெஞ்சை விட்டு அன்போடும் பாசத்தோடும்
அரவணைத்த எங்கள் அன்புத் தந்தையே!
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!
உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும்
எமக்காகத் தந்து எங்கள் உயர்வே உங்கள்
ஒரே இலட்சியமாய் கொண்டு வாழ்ந்தீர்கள்
அப்பா!
உங்களுடன் வாழ்ந்த நிமிடங்கள்
எங்கள் வாழ்வில் சுடர் விடும் ஒளியாய் மலர்கின்றன
இரண்டு ஆண்டு ஆனாலும்
அழியாத அன்புருவாக- என்றும்!
வாழ்வீர்கள் எங்கள் நெஞ்சங்களில்..!
Deepest condolences, Rest In peace