

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனை, கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாவும் கொண்ட பொன்னுத்துரை பரமநாதன் அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை(காட்டுப்பாதை), பரிமளம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசுந்தரம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலராணி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
பகீரதன்(கனடா) அவர்களின் அன்புத் தந்தையும்,
நளினி(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
ரமண்ஜா(கனடா), ரக்சனா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான ராசநாயகி, கந்தசாமி மற்றும் குணநாயகி(பிரித்தானியா), சுகிர்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, கமலாசனி, கந்தசாமி மற்றும் நவரட்ணராஜா(இலங்கை), காலஞ்சென்ற ராஜசுந்தரம், ஜெயசுந்தரம்(இலங்கை), நடனசிவம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய அத்தானுக்கு எம் கண்ணீரஞ்சலிகள். உங்கள் புன்முறுவலோடு நகைச்சுவை கலந்த உரையாடலை இனி எப்போ கேட்போம்?...