யாழ். கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை பகீரதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
நம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம்
கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்து நிற்கும்
ஆனால் சற்றும் சுயநல நோக்கம் இல்லாமல்
எப்போதும் நம் நலன் விரும்பும்
நலன் விரும்பி நம் அப்பா தான்
எம் மனதில் ஓராயிரம் கனவுகள்
நாம் கண்டோம் அப்பா
அக்கனவெல்லாம் நனவாக முன்
நம் கண்முன்னே மறைவாய் என
நாம் நினைக்கவில்லை அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்து நேரிலும், தொலைபேசி, மின்னஞ்சல், ஊடாகவும் எமக்கு ஆறுதலையும் அனுதாபங்களையும் தெரிவித்தவர்களுக்கும் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் எமக்கு பல்வேறு வழிகளிலும் உதவிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 03-06-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "அருளகம்" கரம்பொன் குமாரசாமி அருளமணி குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த...