Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 JUN 1940
இறப்பு 28 FEB 2018
அமரர் பொன்னுச்சாமி காங்கேயநாதன்
JP, ஓய்வுபெற்ற மின் பொறியியலாளர், முன்னாள் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்
வயது 77
அமரர் பொன்னுச்சாமி காங்கேயநாதன் 1940 - 2018 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.


யாழ். கலைநகர் சித்தன்கேணி குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுச்சாமி காங்கேயநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.


அன்பின் திருவுருவே அகத்தின் ஒளிவிளக்கே அப்பா
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து ஓராண்டு ஆன போதும்
உம்மை நாங்கள் இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம் அப்பா!

அம்மாவின் மறைவுக்குப் பின்பு நாங்கள்
கண்ணீர் வழிய நின்ற வேளையில்
 எங்களுக்கு நீங்கள் ஆறுதலாக நின்றீர்கள் அப்பா!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ அப்பா!

எம்மை ஒரு நிமிடம் காணாவிட்டாலும்
துடித்து பதை பதைத்த நினைவுகள்
இன்னும் கண்ணீர் விழியை நனைக்கின்றது அப்பா!

எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!

ஒருபோதும் உம் கொள்கை
நம்வாழ்வில் என்றும் மறையாது அப்பா!
உங்கள் நினைவுகள்
எம் மனதை விட்டு நீங்காது அப்பா!

உங்கள் நினைவுகளுடன் அன்புத் தம்பிமார்கள்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

உங்கள் ஆத்மா சாந்திபெற முருகனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் 1ம் ஆண்டு சிரார்த்த திதி கிரியை 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையிலும், பிரான்ஸிலும் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்