

யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா இராசரத்தினம் அவர்கள் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பொன்னையா லக்ஸ்மிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், பாக்கியம் கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொ.இராசையா(ஓய்வுபெற்ற உதவி புகையிரத அத்தியட்சகர்), பூவிலிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ்/பரியோவான் கல்லூரி), சங்கரப்பிள்ளை பாக்கியம்(ஓய்வுபெற்ற ஆசிரியை), சிவஞானம்(ஓய்வுபெற்ற பொறியியலாளர்- இ.போ.ச), அன்டனி பரமேஸ்வரி(ஓய்வுபெற்ற உப அதிபர்- ஆனைப்பந்தி மெ.மி.வித்தியாலயம்), பரமானந்தம்(பிரான்ஸ்), பாலச்சந்திரா(ஓய்வுநிலை ஆசிரியர்- தி/ புனித சூசையப்பர் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலகுகராசா சறோஜினி தேவி அவர்களின் அன்பு மைத்துனரும்,
இராசகரன்(பிரான்ஸ்), இராசராணி(பேபி- பிரான்ஸ்), சர்மிளா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டக்ளஸ், சசிகரன், சுதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாருசன், சானுசன், தேனுசன், மெர்லின், செவ்ரின், தூயவன், சஞ்செய், துசாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-09-2021 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details