யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், மந்துவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா படைவீரசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அணைந்ததோ ஒளி விளக்கு!
அறுந்ததோ பாசப்பிணைப்பு!
என்ன சொல்லி தேறிடுவோம்
உறவே உன் பிரிவுதனை
உன் புன்னகை வதனம்தனை இனி
எப் பிறப்பில் காண்போம் நாம்!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
மறைவால் துயருறும்
கோபாலகிருஷ்ணன் சுகந்தினி குடும்பம், ஜேர்மனி
அணைந்ததோ ஒளிவிளக்கு? அறுந்ததோ பாசப்பிணைப்பு?
என்ன சொல்லி தேறிடுவோம் உன் பிரிவுதனை
உன்புன்னகை வதனம்தனை இனி எப்பிறப்பில் காண்போம் நாம்!
பொல்லாத காலனவன் எமைப்பிரித்து
உனையெடுத்து பாதகம் புரிந்து விட்டான்!
என்ன சொல்லித்தேறிடுவோம்?
யாரிடத்தில் போய் அழுவோம்?
மனம்தான் ஆறிடுமோ!
உன்னை மறந்து வாழ்ந்திடுமோ!
பொல்லாத துயரமதில் மூழ்கிக்கிடக்கின்றோம்!
மறைவால் துயருறும்
ஆ.இரத்தினராசா குடும்பம், நுணாவில்
அண்ணா கடவுளை நீங்கள் கும்பிட்டு வீட்டில் சுவாமிப் படத்துக்குபூப்போட்டு கும்பிட்டு உங்கள் அமைதியான உள்ளத்துக்கு திக்கற்றவர்க்கு தெய்மே துணையென்று நீங்கள் கடவுளிடம் சென்றுவீட்டீர்கள் உங்களுக்கு நாங்கள் எல்லோரும் இருந்தாலு அருமைத் தங்கச்சி சந்திராவும் இரத்தினராஜாவும் உங்களுக்குப் பிள்ளைகளாகவும் சகோதரராகவும் உங்களைப் பார்த்தனர். தங்கச்சி சந்திரா உங்கள் பிரிவால் ஆறாத்துயரில் உள்ளார். அண்ணா நீங்கள் என்னில் அளவு கடந்த பாசம் நானும் உங்களில் அளவு கடந்த பாசம் நான் உங்களிடம் கொடுக்கச் சொல்லி வலம்புரிச் சங்கும், துளசி மாலையும் தங்கை குணமிடம் கொடுத்து அனுப்பியுள்ளேன்
“திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனிதனைச்
சிவனெனவே கண்டலர்க்கும் சிவனுறைவே நாங்கே”
அண்ணா அண்ணா என்று கூப்பிட்டு என்னுடைய கண்ணீர் இன்றும் ஆறவே இல்லை.
ஆனந்தமணி, நாகேஸ்வரி(சின்னமணி)
அன்னாரின் மரணச் செய்தி கேட்டு நாங்கள் துயருற்று இருந்தவேளை நேரில் வருகை தந்தவர்களுக்கும், தொலைவில் இருந்து வந்தவர்களுக்கும், தொலைபேசி மூலம் துக்கம் பகிர்ந்தவர்க்கும், மலர்வளையங்கள் அனுப்பியவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் பங்கேற்றவர்களுக்கும், அனுதாபக் கவிதைகள் அனுப்பியவர்களுக்கும், அனுதாபங்களை தெரிவித்தவர்க்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். அதனைத் தொடர்ந்து 16-11-2019 சனிக்கிழமை அன்று கீரிமலை நகுலேஸ்வர ஆலய மடத்தில் நடைபெற இருக்கும் அந்தியேட்டி கிரியை மற்றும் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை ஜெகா(கனடா) அவரின் இல்லத்தில், 18-11-2019 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்திலும் நடைபெறும்.