3ஆம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னன் முருகேசு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அகிலம் விட்டு அங்கு சென்று
ஆண்டு மூன்று தான் ஆகிவிட்டது ஐயா !
ஆறாத்துயரின் அழுத்ததால் அல்லும் பகலும்
அழுகின்றோம் அகிலத்தில் நாமிங்கு!
எம் அன்புத் துணையே ! எம்மவரின் ஆருயிரே !
அன்பு அப்பா உன் அழகுமுகம் பார்க்க
அவதரித்த உம் ஆலம் விழுதுகள்
விம்மி விழுந்து வீரிட்டுக் கிடக்குதையா!
மண்ணில் உன் மதிமுகம் காட்டையா!
எம் பண்பின் பகலவனே
பதைபதைத்து பதறுகின்றோம் நாமிங்கு
உம் பால்வடியும் முகம் காண
துடிக்கின்றோம் இப்போ
தோத்திரத்தால் தொழுது விழுகின்றோம்
தோன்றி ஒருமுறை உன் தூயமுகம் காட்டையா !!!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்