1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 05-01-2024
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், சரவணை, இத்தாலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் சேனாதிராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளி விளக்கே
உற்றவர் சுற்றமும் கூடிக் கழித்த உறவுகளை
கைவிட்டுச் சென்றதேனோ அப்பா!
மீளாத்துயில் கொண்டு எம்மை
ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே அப்பா!
மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து
ஓராண்டு ஓடினும்
நினைவுகள் எம் இதயத்திலிருந்து ஒருபோதும் மறைவதில்லை
பாசமான பல நினைவுகளை
நம்மிடம் விட்டுச் சென்றீர்களே அப்பா!
கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர்
பூக்களால் அர்ச்சித்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்