யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சதாரூபவதி அவர்கள் 29-1-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம்(சீனித்துரை), விஜயலெட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நாகரெட்ணம் நவபாக்கியம் தம்பதிகளின் மருமகளும்,
பொன்னம்பலம்(சின்னராசா) அவர்களின் மனைவியும்,
சந்திரேஸ்வரன், ஜெயந்தி, சோதீஸ்வரன், தனுஜா ஆகியோரின் தாயாரும்,
சுலோசனா(தேவி), தனேஸ்வரி(லலிதா), காலஞ்சென்றவர்களான உமாதேவி, சிவகுமார் மற்றும் சாந்தகுமார்(லண்டன்), நிரஞ்சனாதேவி(பவி), ராஜ்குமார்(ராஜன்), நிகிலா, ரவிகுமார், ரகுமார்(ரகு) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற விமல்ராஜ், ரதிமலா, சேகர் ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம், தெய்வேந்திரம், திருக்கேதீஸ்வரி, சிறிகாந்தன், ஜெயநிதி, மோகனமூர்த்தி, மிதிலா, பாலசிங்கம், சத்தியலெட்சுமி, மகாலெட்சுமி, சோதீஸ்வரி, பாலசுப்பிரமணியம்(லண்டன்), கமலாதேவி ஆகியோரின் மைத்துனியும்,
தக்சன், சேஜன், கவீண ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences to the immediate family,Close relatives and god the soul rest in peace.