10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் சபாலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
பத்து வருடங்களாகியும்
அனல் கக்கி எரியுதையா
எங்கள் அப்பாவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute