

யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராசரத்தினம் அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(சட்டம்பியார்) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரவாகு சின்னாச்சிப்பிள்ளை(மூளாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிதம்பரேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன்(சுவிஸ்), காலஞ்சென்ற விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மஞ்சுளா(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, துரைசிங்கம்(கொழும்பு), காலஞ்சென்ற கனகேஸ்வரி(யோகம்), கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, திலகவதியார், மீனாட்சிப்பிள்ளை, கனகசபாபதி, பொன்னம்பலம், மற்றும் மகாலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துவாரகன்(சுவிஸ்), வந்தனா(சுவிஸ்), இலக்கியன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.