Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 06 DEC 1947
இறப்பு 03 AUG 2023
அமரர் பொன்னம்பலம் புவனேஸ்வரராஜா
ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்(GS)- உடுவில்
வயது 75
அமரர் பொன்னம்பலம் புவனேஸ்வரராஜா 1947 - 2023 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், அரியாலை, சென்னை இந்தியா ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் புவனேஸ்வரராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அமைதியான புன்சிரித்த முகமும்
அயராத உழைப்பும் - உறவுகளை
ஆதரிக்கும் உள்ளமும் வளமான வாழ்வுக்கு
அன்பால் கிடைத்த வரமே
அவனியை விட்டு நீங்கி-இன்றோடு
நாட்கள் 31 ஆனதோ
ஆறவில்லை எம்துயர்

குறையேதுமின்றி காத்த - எமது
குடும்ப ஆலவிருட்சத்தின் - ஆயுள்
காலத்தை குறைத்தானோ
ஆண்டவன்
கண்ணீரில் எம்மை கரையவிட்டு

காலனவன் தன் கணக்கை முடிக்க
கடல் கடந்து சென்றீர்களோ
வாழ்வை வென்றுவிட்டேன் என்று
விண்ணுலகம் விரைந்துவிட்டீர்களோ

நெஞ்சில் நீங்கா நினைவுகளோடு
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவரை பிரார்த்திக்கும்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 31-08-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்திய நிகழ்வு 02-09-2023 சனிக்கிழமை அன்று மு.ப 11.00மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

வீட்டு முகவரி:
 225, 4ம் ஒழுங்கை,
 உக்கிளாங்குளம், வவுனியா.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.