யாழ். புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா சிவப்பிரகாசம் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
Dr. பரமநாதன், சிதம்பரநாதன், தியாகநாதன், யோகநாதன், காலஞ்சென்ற ரஞ்சனி, இராசநாதன், சற்குணநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மீனாட்சிப்பிள்ளை, தியாகராசா, தங்கம்மா, சங்கரப்பிள்ளை, பாக்கியம் ஆகியோரின் இணைபிரியாச் சகோதரியும்,
Dr. காஞ்சனா, சயாணி, சிவசாந்தினி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
Dr. அஜீவ், Dr. மது, நிசாந், கிசோ, துசாரா, மிரன், மிதுரன், மினோரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our hertfelt condolences to Nathansand his family