யாழ். இளவாலை பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி அலவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவகனகாம்பிகை அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும் வீட்டுக் கிருத்தியக் கிரியை 15-08-2022 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.