Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 15 SEP 1934
இறப்பு 12 SEP 2026
திரு பொன்னம்பலம் கனகலிங்கம்
வியாங்கொடை பிரபல வர்த்தகர்
வயது 91
திரு பொன்னம்பலம் கனகலிங்கம் 1934 - 2026 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு ஆறாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொக்குவில் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கனகலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்!

உரிமை சொல்ல எத்தனை
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா
என்ற உறவுக்கு யாருமே நிகரில்லை!

நாடகள் முப்பதொன்று போனாலும் அழியாது
நம் சோகம் மீளாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 10-10-2026 சனிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிரியைகள் 12-10-2026 திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது . அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கல்ந்துக்கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். 

வீட்டு முகவரி:
இல்- 11,
அம்மன் கோவீல் வீதி அம்பட்டன் பாலம்,
கொக்குவில், யாழ்ப்பாணம்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.