Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 SEP 1939
இறப்பு 08 MAY 2019
அமரர் பொன்னையா தனஞ்செயநாதன்
வயது 79
அமரர் பொன்னையா தனஞ்செயநாதன் 1939 - 2019 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூவரசங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தனஞ்செயநாதன் அவர்கள் 08-05-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

காலஞ்சென்ற மனோன்மணி, உதயகுமாரி ஆகியோரின் பாசமிகு கணவரும்,

தணிகைக்குமரன்(லண்டன்), காலஞ்சென்ற தணிகைச்சுடர், தணிகை(லண்டன்), காலஞ்சென்ற தணிகை ராஜன், தணிகையரசன்(RDA- கொழும்பு), உதயநாதன்(லண்டன்), உதயராஜன்(ஆசிரிய ஆலோசகர் வவுனியா), தனஞ்சலி- சமூர்த்தி உத்தியோகத்தர் வவுனியா), தட்ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நேசமணி, சிவபதி, சிவசுந்தரம், விஜயேந்திரன் மற்றும் சத்யமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆர்த்தி(லண்டன்), நிமலமுருகன்(லண்டன்), ரதனி, சிவாஜினி(லண்டன்), கிருஷா(ஆசிரியை வவுனியா மகாவித்தியாலயம்), பிரதீபன்(தொழிற்பயிற்சி அபிவிருத்தி முகாமையாளர்), கோகிலன்(பனை, தென்னை வள அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சைதன்யா, ரிந்தியா, கஸ்தூரி, பிரவீன், நிருஷன், நிமாலிகா, மாறுஷா, சாம்பவி, சாதுர்யா, அருணிகா, அஸ்விதா, அனுத்ரன், அம்சிகா, நியோதனன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 8ம் கட்டை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices