யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, வவுனியா பண்டாரிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தாவடி கிழக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா மயில்வாகனம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய்
எங்கள் வாழ்வின் வழிகாட்டியாய் திகழ்ந்து
எமையெல்லாம் விட்டுப் பிரிந்து இறை பதம் எய்திய
எங்கள் குடும்ப தலைவன்
அமரர் பொன்னையா மயில்வாகனம் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லத்துக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அன்னாரின் பூதவுடலுக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், உள்ளூர், வெளிநாடுகளில் எமது இல்லங்கள் வந்தும் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் இரங்கல் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையம், மாலைகள், பானர்கள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்தவர்களுக்கும் இறுதி ஊர்வலத்தில் பங்கு கொண்டவர்களுக்கும், அந்தியேட்டி, சபீண்டிகரண நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் ஆலய குருமார்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்.
அவர்காளின் அந்தியேட்டிக் கிரியை 04-12-2019 புதன்கிழமை அன்று காலை 05:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும்.
அன்னாரின் ஆத்மா சாந்தயடைய இறைவனை வேண்டுகிறோம்