
யாழ். சாவகச்சேரி கற்குழி தபால் கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா தனபாலசிங்கம் அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலி.
எம்முயிர் தந்தையே எங்கள்
உள்ளங்களின் ஒளிவிளக்கே
சூரியனைக்கண்டு மலரும் தாமரையாய்
உங்கள் அன்புமுகம் பாராமோ அப்பா!
எமக்கு துணையாய் ஆதரவாய்
சிறந்த வழிகாட்டியாய்
நீங்கள் என்றும் எம்முடன் வாழ்வீர்கள்!
இறையருளோடும் உங்கள் ஆசிகளோடும்
எங்கள் வாழ்வின் கனவுகளும்
வளர்ச்சிகளும் நிஜமாகும்..
எம்மோடு நீங்கள் என்றென்றும்
கூடவே இருக்கின்றீர்கள் என்று
இப்பூவுலகில் உளம் தளராது பயணிக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!
அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 17-12-2018 திங்கட்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும் மற்றும் வீட்டுக் கிருத்திய நிகழ்வு 19-12-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்திலும் நடைபெறும் அத்தருணம் தாங்களும் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
I knew him as a young boy at Chava. He was a quiet person and was very helpful to others. I wish to convey my belated condolence to his family. May His Soul Rest in Peace.