Clicky

அமரர் பொன்னையா நற்குணநாதன்
உதிர்வு - 28 DEC 2021
அமரர் பொன்னையா நற்குணநாதன் 2021 உரும்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ALLAMATHEVAN 31 DEC 2021 Australia

அன்பகலா நற்குணண்ணை, உங்கள் இழப்பு செய்தியைப் பார்த்தேன். மனதில் கவலைகள். படத்தில் முகத்தினைப் பார்த்தேன். அன்று உரும்பிராயில் பார்த்த அதே முகம்.மறக்க முடியாது.நாம் அயலவர்கள் என்ற உறவு. என் அம்மாவின் பாசத்திற்குரிய அருளம்மாக்காவின் அன்பு மகன். பாசத்தோடு அல்லமர் என்று அழைத்த அந்த நாட்கள். காலத்தின் கோலத்தினால் திக்குத் திக்காய் பறந்த நாங்கள் உலகத்தின் நாலாபுறமும் சிதைந்து போனோம். ஊர் நினைவுகளோடு வாழ்கின்றோம். உங்கள் அன்பான ஆன்மா எல்லாம் வல்ல உரும்பிராய் ஞானவைரவப் பெருமானின் பாதக்கமலங்களில் அடைக்கலம் பெற்று சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம். உங்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காலஞ்சென்றவர்களான பண்டிதர் ஜயா சரஸ்வதி அம்மா குடும்பம் சார்பில் தம்பி அல்லமர் குடும்பம் மெல்பேண் அவுஸ்திரேலியா.

Tributes