யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நல்லையா அவர்கள் 01-12-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற செல்லையா, குணரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
பாலசுந்தரம்(கனடா), கனகசுந்தரம்(ஜெர்மனி), சறோஜினி(ஓய்வுபெற்ற ஆசிரியை- கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயம்), கருணாதேவி(கனடா), செந்தில்நாதன்(ரவி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பூரணம், நடராசா, நல்லசேகரம்பிள்ளை மற்றும் கனகாம்பிகை, ராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தினி(கனடா), ராஜமணி(ஜெர்மனி), அருணகிரிவாசன்(ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- கோண்டாவில் இந்துக்கல்லூரி), காலஞ்சென்ற தவேஸ்வரன்(கனடா), யோகானந்தி(யோகா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலகுமார்- சர்மிலா(கனடா), சர்மிளா- சங்கர்(கனடா), நிர்மலா- அனந்தகுமார்(கனடா), யாழினி- தினேஸ்குமார்(ஜெர்மனி), கீர்த்தனா- சிவகரன்(ஜெர்மனி), டர்சன்- புஜிதா(ஜெர்மனி), இகபரன்(இலங்கை), யதுஷ்னா(மருத்துவபீட மாணவி- கொழும்பு பல்கலைக்கழகம்), கிஷோன்(கனடா), ஆரணி(கனடா), கஜனிதா(இலங்கை), சதுசன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,
அபிஷா, தனுசன், சாகித்தியா, ஜெனிற்ரா, நிக்சன், திவ்வியன், லியான், றியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2018 புதன்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences