
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நடராஜா அவர்கள் 17-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. விஜிதா, கிருபாஜினி(Melbourne), கிரிதரன்(ஆசிரியர் - ஒஸ்மானியா கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, தெய்வானப்பிள்ளை மற்றும் மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீகுமரன்(Melbourne), பிரதா(அதிபர்- யா/கோட்டைக்காடு அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரமோதயன், தாரிணி, வரோதயன், லதாங்கி, தருணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.