யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா மரியதாஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
நாட்கள் 31 அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
இன்று போல் நினைப்பு உம் கைபட்ட
என் கன்னங்கள் என்றுமே மாறாது
எம் வாழ்வின் நினைவுச் சின்னங்கள்
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்
காவல் தெய்வமாய் என்றும் இருப்பதாய்
கனக்கும் எம் இதயங்கள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.