

யாழ். மாவிலங்கையடி அல்வாய் வடமத்தியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வட மேற்கு திக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கனகரத்தினம் அவர்கள் 20-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வைராத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலேஸ்வரி(நாகேஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகெங்கை, காலஞ்சென்ற தேவராஜா மற்றும் குணரத்தினம் (தெய்வம்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுதர்சன்(சுதன் -லண்டன்), சயந்தன்(கர்ணன்), நிதர்சன்(சேந்தன்), நிரோசன், நிவேதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிருந்தா(லண்டன்), கஜாணனன்(ஆசிரியர், ஹாட்லிக் கல்லூரி), மைதிலி(பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிலாஸ்(லண்டன்), அஸ்மியா(லண்டன்), ஆதிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.