யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 4ம் குறுக்குத்தெரு, கொழும்பு 15 பள்ளிவாசல் வீதி மோதரையை வதிவிடமாகவும், யாழ். சுண்டுக்குளியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன் அமிர்தலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:01/09/2023.
ஆண்டொன்று ஆனது
கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
ஆண்டொன்று ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
எங்கள் அன்பின் வடிவமே அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் இலக்கணமாய் பண்பின் உருவமாய் என்றும்
எங்கள் இதயத்தில் குடியிருக்கும் அன்பு தெய்வமே
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
இன்றுடன் ஓராண்டுகள் மறைந்துவிட்டது
கடந்தகாலம் எக்காலத்திலும் திரும்பி
வரப்போவதில்லை ஆனாலும் நீங்கள்
எம்மை வாழவைத்து மகிழ்வித்த
காலத்தில் விட்டுச்சென்ற ஞாபகங்கள்
எமக்கு தினமும் கண்முன் நிறுத்தும்.
உங்கள் ஆத்மா சாந்தி
அடைய என்றும் பிராத்தி்க்கும்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்...!
ஓம் சாந்தி....... ஓம் சாந்தி .....ஓம் சாந்தி