யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பயஸ் வின்சன்ட் யோசேப் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பான இறைவா!
இவ் உலகிலிருந்து
உம்மிடம் அழைத்துக்கொண்ட
உமது அடியான் அமரர்
பயஸ் வின்சன் ஜோசப்
அவர்களை உமது நித்திய வான்
வீட்டில் சேர்த்தருள
வேண்டுமென்று
இரந்து மன்றாடுகின்றோம்
ஆமென்.
நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்,
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.
இயற்கையின் அழைப்பிதழில் உங்கள்
பெயரும் இருந்ததை
நாம் அறிந்திருக்கவில்லை
இப்படியும் நடக்கும்
என்றும் நினைத்திருக்கவில்லை
குருதிச் சொந்தமொன்று இல்லையென்று
நம்ப மறுக்கின்றது எங்கள் நெஞ்சம்...
என்றும் உந்தன் ஆத்மா சாந்திபெற
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆன்ம இளைபாற்றிக்கான இரங்கல் திருப்பலி 23-03-2023 சனிக்கிழமை அண்று கொய்யத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மு.ப 11.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்படும். இத்திருப்பலியில் பங்கு பற்றி இவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிக்கும்படியும் பின்பு மதியம் எமது இல்லத்தில் நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
இல.6,
புது வீதி
கொய்யாத்தோட்டம்,
யாழ்ப்பாணம்.
We miss you ( specialy KYC club 1980s members) Nanthan and friends Canada