

‘’என் இயேசுவே! என் வாழ் நாளில்
உம்மையே விரும்பினேன் இன்று உமது நிழலில் இருக்கின்றேன்’’
யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்புப்பிள்ளை அன்னம்மா அவர்கள் 26-12-2020 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், டோமினிக்(செல்லையா) ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், சந்தியாப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் மருமகளும்,
பிலிப்புப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பத்திநாதர்(கனடா), மரியதாஸ் (பண்டத்தரிப்பு), லூர்து ராணி(பூமணி- கொழும்பு), அல்பிரட்யோகன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஆரோக்கியநாதர், சந்திரன், இந்திரன் மற்றும் பற்றிமாராணி(சாந்தா- ஜேர்மனி), வசந்தராணி(மஞ்சு- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நேசம்மா, ராசையா, அன்னப்பிள்ளை, மரியம்மா, நீக்கிலாப்பிள்ளை, மேரி அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பெர்னடேற்(வினோதினி), பவுலீனா, தோமஸ்சந்தியாக்கோ, மேரிநொயலா, அன்ரன் செல்வராஜ், டேவிட்பிலிப் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செஞ்சீவன், ஷாலினி, செறிவன், கவிதா, பிறேவின், கெவின், மொயிறி, பனோசன், ஷரிங்டன், யானுஸ், யவுனியா, லூக்காஸ், அடல்பேட், வில்சன், எடிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிரிஷன், மிஷசன், விசாலி, செறில், விவினா, நிறாஜ், ஈற்றன், வினித், கெயிலா, எலீயான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பண்டத்தரிப்பில் உள்ள புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our Deepest Sympathies