1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப் மரியநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாய்
திகழ்ந்து எம்மை வழிநடத்தி
பாதுகாத்து வளர்த்து எம்
நல்வாழ்விற்காய் தன்னை அர்ப்பணித்த
எம் அன்புத் தெய்வமே!
வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்!
மறையாது இனிய பொழுதில்
காலனவன் செய்த செயலால்
எம்மையெல்லாம்
கலங்க வைத்துப் போனதேன்?
உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்