யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கலிபோர்னியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை கீதபொன்கலன் அவர்களின் நன்றி நவிலல்.
உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்
யோவான் 11:25
அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
அன்பின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
எம்மோடு பயணித்த எங்கள் அன்புத்தெய்வமே!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!
உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
பூப்பூத்தவதனமாய் இருந்துகொண்டே இருக்கும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள்,மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும் இறுதிச்சடங்கில் திருப்பலி நிறைவேற்றிய, இரங்கல் உரைகள் ஆற்றிய அருட் தந்தையர்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவுத் திருப்பலிகள் 09-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 05:00 மணிக்கு கலிபோர்னியாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் மற்றும் 10-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு மண்டைதீவு புனித பேதுருவானவர் தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கப்படும்
Rest in Peace Periappa, I miss you but my thoughts and prayers are with you at this moment. God bless you