
தலவாக்கல லிந்துல்லையைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பெருமாள் குழந்தேஸ்வரன் அவர்களின் 3ம் நாள் கண்ணீர் அஞ்சலி.
“நல்ல போராட்டத்தை போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தை காத்துக் கொண்டேன்.”(2 தீமேத்தேயு 4:7)
வாழ்வுதனை வளமாக்கி
வையகத்தில் வாழ்ந்த போது
உந்தன் ஆவிதனை
காவு கொண்டு போனதேனோ
காலம் முடியும் வரை காத்திராமல்
காலன் உனை கவர்ந்ததேனோ
நாங்களெல்லாம் கண்ணீரில் மூழ்கத்தானோ……
தொட்ட பணி அனைத்தும்
தொடர்ந்து செய்யும் ஆற்றல்
உன் சொத்து
மற்றோர்க்கு உதவி செய்யும்
உயர்ந்த குணம் உன்னிடத்தில்
அன்பு, அடக்கம், அமைதி, பொறுமை
அத்தனையும் கொண்டு
எல்லோர் மனதையும்
புன்னகையால வென்ற எங்கள்
அன்புச் சகோதரனே….
உயிரோடு உறவாடி
உணர்வோடு உள்ளத்தில் கலந்து
உடலோடு நிலை மாறி – உயிர்
மடலோடு காவியமானீரோ…..
உன் வருகைக்காய்
பரலோகம் காத்திருக்க
உன் பிரிவால் நாமிங்கு
சோர்ந்திருக்கின்றோம்
உந்தன் பிரிவை எண்ணி
கலங்குகின்றோம்….
உம் பிரிவால் வாடும் மனைவி - சித்திரா, லிபீஷ் சகாயமேரி(பிரான்ஸ்), நாதன் பிலோமினா(இத்தாலி).