உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பெரியதம்பி துரைச்சாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்த போதும் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றோம் அப்பா!
அன்று ஆனந்த மழையில் நனையவைத்த எங்களை இன்று கண்ணீர் மழையில் நனைய வைத்ததேனோ? ஒளி விளக்காய் இருந்ததெங்கள் குடும்பமின்று இருள் சூழ்ந்து கொண்டதேனோ?
அன்போடு அணைத்து எம்மை ஆசையுடன் முத்தமிட்டு ஆசைப்பட்ட அனைத்தையும் வேண்டி தரும் எம் அருமை அப்பாவை காண்பதெப்போ!
ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும் உங்கள் நினைவுகள் பசுமையாக எப்போதும் எம் இதயத்தில் தெய்வமாய் சுமந்து நிற்போம். எம் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
Our heartfelt condolences Loving Thivaharan and family.