நண்பா அரிகரனே! ஹரிஹர புத்திரனின் மண்டல பூஜை காலத்தில் காலன் உனை அழைத்தானே! அவன் நாமம் உள்ள உன்னை எப்படி அனுமதித்தான்? ஈன்றெடுத்த தாயை இன்னலில்விட்டு- வளர்த்த தந்தையை தனியேவிட்டு- கூடப் பிறந்தவளைத் துடிக்கவிட்டு- அன்புகொண்ட நண்பனை அழவைத்து- அக்கறைகொண்ட மனைவி பிள்ளையை நட்டாற்றில் பரிதவிக்கவிட்டு - நலம்விரும்பிய நண்பர்களை சோகத்தில் தள்ளிவிட்டு- நீ மட்டும் எமைவிட்டுப் போனதேனோ? 1996 இல் நீ இல்லை என்றால் அன்றே நான் மறைந்திருப்பேன் என்னுயிர் உள்ளவரை உனை நான் மறப்பேனோ! இப்போதிருக்கும் உயிர் நீ இட்ட பிச்சையடா! நண்பா அரிகரா.. அன்பை, அறிவை, உணவை, உடமைகளை, இன்பதுன்பத்தைப் பகிர்ந்திருந்தோமே! மறந்துவிட்டாயே மரணத்தில் மட்டும்! பள்ளியில் தொடங்கி பருவங்கள் கடந்து பலநாள் கழித்து உன்னோடு பேசுகையில் , பங்காளி 50 ஆவது பிறந்தநாளுக்கு கட்டாயம் வந்துவிடு என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டு 48 இல் நீ காணாமல் போனதேனோ! நீ மடிந்துபோகவில்லையடா.. எங்கள் இதயங்களில் படிந்துபோயிருக்கிறாய்! இவ்வுலகில் எவ்வுயிரும் நிலைப்பதில்லை! நீ முந்திவிட்டாய் ஒருநாள் மீண்டும் சந்திப்போம் சொர்க்கத்தில்…!!! உன் ஆத்மா சாந்தியடையட்டும்🙏 பிரிவால் துயருறும் நண்பன் மகாலிங்கம்.