Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 03 APR 1944
மறைவு 09 SEP 2021
அமரர் பெரியதம்பி செல்வரட்ணம் 1944 - 2021 இணுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி : 29-08-2022

யாழ். இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பெரியதம்பி செல்வரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்றுதான் அகன்றாலும்
ஆறிடுமோ ஆறாது ஆறாது
ஆண்டாண்டு அழுதாலும் தீராது
 அகராதி புரட்டினாலும், அடிமுடி தேடினாலும்
உங்கள் அன்புக்கு உண்டோ அப்பா அர்த்தம்

அகவாழ்வில் என்னதான் இன்பங்கள் கண்டாலும்
எங்கள் துன்பங்கள் தீருமோ 

இடியாய் விழுந்த இழப்பின்
வலியினைத் தாங்க முடியாது
நாங்கள் துடிக்கின்றோம்
புழுவாய்த் துடிக்கும் எங்கள்
மனதினை தேற்றத் தெரியாது
நாங்கள் தவிக்கின்றோம்
தனியாய்ப் புலம்புகின்றோம்!!! 

வற்றாத உங்கள் நினைவுடன்
மனம் உருகி கலங்கி நிற்கின்றோம்

உங்கள் ஆன்மா சாந்தியடைய
 எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்