மரண அறிவித்தல்
தோற்றம் 13 FEB 1930
மறைவு 24 SEP 2021
திருமதி பேரம்பலம் கனகாம்பிகை
வயது 91
திருமதி பேரம்பலம் கனகாம்பிகை 1930 - 2021 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், நீலிப்பந்தனையை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் கனகாம்பிகை அவர்கள் 24-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகநாதன்(முன்னாள் இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்- மெமோறியல் கல்லூரி, மானிப்பாய்) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(கட்டட ஒப்பந்த மேற்பார்வையாளர்- காரைநகர்) தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பேரம்பலம்(முன்னாள் புகையிரத நிலைய அதிபர்- மருதானை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(முன்னாள் இளைப்பாறிய சட்டத்தரணியும், பிரசித்த நொத்தாரிசும்- கொழும்பு), நடராஜா(முன்னாள் இளைப்பாறிய அதிபர்- காரைநகர் இந்துக்கல்லூரி, வைத்தீஸ்வராக்கல்லூரி- யாழ்ப்பாணம்), குமாரசாமி(விவசாயப் போதனாசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம்- கண்டி), கந்தசாமி(முன்னாள் மாணவன் பேராதனைப் பல்கலைக்கழகம்- கண்டி), ஞானாம்பிகை, அகிலாம்பிகை மற்றும் மகாதேவன்(இளைப்பாறிய வருமானவரி உத்தியோகத்தர்- கொழும்பு, கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரசோதி, பரமேஸ்வரி, சரஸ்வதி, புனிதவதி, காலஞ்சென்ற திருச்செல்வம் மற்றும் திருக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தியாகராஜா மற்றும் சிவநாதன், வன்னியசிங்கம், சுப்பிரமணியம், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இராசநாயகம்(முன்னாள் இளைப்பாறிய கணக்காளர், பட்டினசபை மன்னார்) மற்றும் செல்வநாயகம்(இளைப்பாறிய கணக்காளர் புள்ளிவிபரத்திணைக்களம்- கொழும்பு), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பரஞ்சோதி மற்றும் ஜெயமணி, காலஞ்சென்றவர்களான திரவியநாதன், கருணாகரன்(இளைப்பாறிய இரசாயனவியல் ஆசிரியர்- யாழ்ற்றன் கல்லூரி) மற்றும் சிவானந்தவல்லி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற மதுரம், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,

வாசுகி- தர்மகுலசிங்கம், சத்தியராணி- மகேஸ்வரன், கவிதா- ரகுபதி, கௌசல்யா- கணேசானந்தன், மதிவதனன்- தனேஸ்வரி, சிவதர்மினி- கோகுல்ராஜ், பகீரதி- அருண், ஜனனி- கஜேந்திரன்(பட்டதாரி உத்தியோகத்தர், சுற்றாடல் அதிகார சபை- மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்), மயூரி(மாணவி, மருத்துவபீடம், ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), லோகநவநீதன்(மாணவன், கலைப்பீடம், யாழ் பல்கலைக்கழகம்), தினேஷ்(மென் பொறியியலாளர்), துவாரகா(மருந்தாளர்), துஷானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சரண், திவ்வியா, மதுரா, பிரணவன், பவிஷன், மகிஷா, தனுக்‌ஷன், மதுஷன், அபிக்‌ஷன், அஸ்விக்கா, அஸ்வியா, ஆதிரன், அனன்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices