யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், வவுனியா புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் சிவகாமசுந்தரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னையோர் ஆலயம் அதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
நம் கண் முன் நாம் காணும் தெய்வம் அன்னை.
கருவினில் எம்மை சுமந்திடும் போது கணவையும் சுமந்தவள்அன்னை,
திருவுடல் சுமந்து திருந்திடக்கண்டு திருமுகம் மலர்ந்தவள் அன்னை.
எமக்காக எம்மோடு விழித்திருந்து பசித்திருந்து தனித்திருந்து,
எம்மைக் காப்பவள் அன்னை.
கண்களில் கோபம் வாயினில் சாபம் என்றுமே அறியாள் அன்னை,
சந்திர வதனம் அன்பினில் சிகரம் சாந்தமே ஆனவள் அன்னை.
அன்னையைப் பற்றி போற்றி துதித்திட
அன்னைக்கு ஆயிரம் கண்கள் அவள் தான் அன்னை
ஆயிரம் கண்ணுடையாள் அம்மா !
ஒரு திங்கள் கடந்தாலும்
உங்கள் மேல் வைத்துள்ள பாசங்கள் யாவும்
நினைவலைகளாக எம் முன் திரை ஈடுகின்றது.
அம்மா! சிவகாம சுந்தரி!
என்றும் எங்கள் தெய்வமாக
எங்கள் இதயங்களில் இருப்பாய்.
அம்மா இறைவனடி ஏய்திய செய்தி கேட்டு எமது நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தொலைபேசி மூலம், நேரிலும் வந்து துயரத்தினை எம்முடன் பகிர்ந்து கொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இறுதிக்கிரியைகளில் கலந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், 03 - 11- 2019 அன்று அந்தியேட்டி கிரியையிலும், வீட்டுகிருத்தியத்திலும் பங்கு கொண்டு சிறப்பிப்பவர்களுக்கும், மேலும் பல வழிகளில் உதவி செய்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மணமார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.