Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUL 1943
இறப்பு 15 JUN 2020
அமரர் பவளரத்தினம் சின்னத்துரை
வயது 76
அமரர் பவளரத்தினம் சின்னத்துரை 1943 - 2020 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு களவாவோடையை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பவளரத்தினம் சின்னத்துரை அவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் சின்னத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னத்துரை, அன்னலட்சுமி, இராசதுரை, மற்றும் அரியரட்ணம்(இலங்கை), வசந்தராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவத்திரா(கனடா), சாரதா(இலங்கை), சிறிஸ்கந்தராசா(கனடா), நிர்மலா(இலங்கை), பாலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரராஜன், புவனேஸ்வரன், மற்றும் ஜெகதேவி(கனடா), சன்ரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சத்தியப்பிரியா(கனடா), அகிம்சா(இலங்கை), அஞ்சுதன்(இலங்கை), காலஞ்சென்ற அனுசிகா, ரம்யா(கனடா), ஆதுசா(கனடா), நவீஷ்(கனடா), நித்திலா(சுவிஸ்), நிதுஷன்(இலங்கை), பவித்திரா(இலங்கை), பானுஷன்(இலங்கை), அனோல்(கனடா), செலஸ்டீனா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மயூரன்(கனடா), பிரியமேனன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஷ்வின்(கனடா), கவீன்(கனடா), ஜவீனா(கனடா), வருண்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம் .

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 15 Jul, 2020