யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு பிரான்பற்று, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பவளராசா நாகம்மா அவர்கள் 20-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் தங்கநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பவளராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவகுமார்(மொன்றியல்), சசிகுமார்(மொன்றியல்), ஜெயந்தி(மொன்றியல்), சுகந்தி(மொன்றியல்), ஸ்ரிபன் ராஜா(Auto Rajh- மொன்றியல்), காலஞ்சென்ற சுபாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மார்க்கண்டு(மொன்றியல்), குமாரசாமி(மொன்றியல்), பாலசுப்பிரமணியம்(லண்டன்), தங்கரத்தினம்(இலங்கை), தவமலர்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பரமேஸ்வரி, நவரத்தினராசா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவறஞ்சினி, சிறீதரன், கிரிஜா, யோகேஸ்வரன், தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கரன், தனுஸ், தனோஜன், தனேஸ், கிஷோக், றஞ்சித், தனுஷா, ருஷானி, தேனுகா, சங்கீதா, வர்னிகா, மிதுஷா, சுஜிதா, தீப்பிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2020 புதன்கிழமை அன்று மொன்றியலில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது கண்ணீர் அஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம். ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.