
யாழ். திருநெல்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பற்குணராசா பத்மாவதி அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராஜேஸ்வரன், வாகீஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரன் பற்குணராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம், மணிமேகலை, யோகானந்தம், தில்லைநாதன், சற்குணவதி மற்றும் செல்வராசா, பேரின்பநாயகம், சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ராஜபத்மன், கிருபாணந்தன்(ஆசிரியர்), உதயன்(பிரான்ஸ்), சுதர்சன்(பிரான்ஸ்), அருட்செல்வன்(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்), அனுசியா(லண்டன்), கஜேந்திரன்(பொறியிலாளர்- சிங்கப்பூர்), மைதிலி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜேஸ்வரி, காயத்திரி, சாருமதி, அனுஷா, குகனி(நீதிமன்ற சுருக்கெழுத்தாளார்), பகீரதன்(லண்டன்), கஜேந்தினி, ஜெகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சைனிகா, கிலைக்ஸ்ரன், டர்ஸ்வனா, லதித்தியன், அருவி, அருன், டேனுஷன், அத்ஷயா, ஹர்ஜின், ஹரிஸ்கன், சுபிக்ஷ்சன், சர்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-06-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடந்து பி.ப 12:00 மணியளவில்கொக்குவில் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details