
யாழ்.இணுவில் மேற்கு கந்தசாமி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பதுமசேனா மகாதேவன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று பத்து ஆண்டுகள்
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!
மாதங்கள் பல சென்றாலும்
வலிகள் நகரவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
உங்களை நாங்கள் மறக்கவில்லை!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
தாலாட்டி சோறூட்டி வளர்த்த சொற்பதமே!
தினம் தொழுகின்றோம் உன் பொற்பாதமே!
இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும்
அன்போடு எமை ஆழ்வாய்!
தொலைந்துவிட்ட இந்த பத்து வருடத்தில்
உங்கள் முகத்தை
தேடாத நாட்களில்லை...???
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் மக்கள்,
மருமக்கள், சகோதரர்கள், பேரப்பிள்ளைகள்...
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Rest in peace