யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், நுவரெலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மினி கணேசமூர்த்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
காலம் நகர்ந்தாலும்,
முப்பத்தொன்று நாட்கள் கடந்தாலும்,
உங்கள் இழப்பின் வலி குறையவில்லை;
உங்கள் நினைவின் நிழல் விலகவில்லை.
நீங்கள் எம்மிடமிருந்து பிரிந்தாலும்,
நீங்கள் தந்த அன்பும் பாசமும்
என்றும் எங்கள் வாழ்வில் ஒளி வீசும்
உங்கள் நினைவுகள் எங்கள் உள்ளங்களில்
என்றும் நிலைத்திருக்கும்
உங்களின் அன்பும் ஆசிகளும்
எங்களை என்றும் வழிநடத்தும்
இறைவனின் திருவடிகளில் தாங்கள்
நித்திய அமைதியும் பேரின்பமும் பெற
நாம் அனைவரும் பிரார்த்திக்கின்றோம்
“மறைந்தாலும் மறையாதது
அன்பு நிறைந்த நினைவுகள்.”
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.