யாழ். அராலி செட்டியார்மடத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெரு ஒழுங்கை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி தியாகராஜா அவர்கள் 18-3-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சச்சிதானந்தம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி குமாரசாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சூரியகுமாரன்(லண்டன்), நாகராஜன்(கனடா), கைலாசநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நளினி, சுபித்ரா, சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜானு, ஜிஷ்ணு, பிரணவன், வைஷ்ணவன், சஹானா, ஐஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ராதா, கௌரி, பிரதீபன், சஞ்சீவன், ரஜீவன், நிஸ்கலா, சிவாஜினி, ஜெயந்தா, அருள், பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமியும்,
ரவி, ஸ்ரீ, ராஜி, கண்ணன், வினோதா, சாந்தி, குமுதி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
திலகவதி, யோகானந்தன், உமாவதி, ஜெயானந்தன், காலஞ்சென்ற சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன், சிவனேஸ்வரி, காலஞ்சென்ற சரவணபவன், கௌரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Sincere condolences from ALL of us. She will always be remembered for her ever so compassionate-always welcoming heart! May her soul Rest In Peace